பித்த கோளாறு போக்கும் நன்னாரி

நன்னாரி, சீமைநன்னாரி, பெருநன்னாரி, கருநன்னாரி என்று நன்னாரியில் 4 வகைகள் உள்ளன. இந்தியாவில் எங்கும் வளரும் கொடி வகையைச் சேர்ந்தது. அந்த வகையில் நன்னாரியில் வளரும் கொடி வகையை சேர்ந்தது. எதிரடுக்கில் அமைந்த குறுகி நீண்ட இலைகளையுடைய கம்பி போன்ற கொடியினம். இந்த வேரின் மேற்புரம் கருமை நிறமாகும். உள்ளே வெண்மை நிறமாகவும், நல்ல மணமுடைய தாகவும், வாயிலிட்டுச் சுவைக்க சிறிது கசப்பாகவும் இருக்கும். விதை நாற்றுக்கள் மூலம் இனப்பெருக்க செய்யப்படுகிறது. முக்கிய வேதியப் பொருள்கள்: இலைகளிலிருந்து […]

இடுப்பு மடிப்பு உஷார்

திருமணமான பெண்கள், விவாகரத்தான ஆண்களின் உடல் பருமன் விரைவில் அதிகமாகிறது. அதிலும் இடுப்பு பகுதியில்தான் அதிகம் சதை போடுகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு. உடல் பருமனால் உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் அவதிப்படுகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அமெரிக்காவின் ஒஹியோ மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் டிமித்ரி ட்யுமின் தலைமையில் உடல் பருமன் குறித்து சமீபத்தில் விரிவான ஆய்வு மேற்கொண்டனர். 1986&ம் ஆண்டு முதல் 2008&ம் ஆண்டு வரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆண், பெண்களிடம் இருந்து […]

வயிற்று புண்களுக்கு மருந்தாகும் உருளைக் கிழங்கு

வயிற்று புண்களை உருளைக் கிழங்கு ஜூஸ் எளிதாக ஆற்றுவதை மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உருளைக் கிழங்கு ஜூஸில் அதிக அளவில் உள்ள ஆன்டிபாக்டீரியல் மூலக்கூறுகளால் வயிற்று புண் ஆறுவது சாத்தியமாகிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூலக்கூறுகள் வயிற்றில் அல்சருக்கு காரணமான பாக்டீரியாவை அழிப்பதுடன் நெஞ்செரிச்சலை போக்கவும் காரணமாகிறது. இதனால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது. ஆய்வுக்காக பல்வேறு வகையான உருளைக் கிழங்குகள் சேகரிக்கப்பட்டு அதிலிருந்து சாறு எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதில் மாரிஸ் பைப்பர் மற்றும் கிங் […]

பற்கள் பளிச்சுன்னு ஆரோக்கியமா இருக்க, இதெல்லாம் வெச்சு ப்ரஷ் பண்ணுங்க…

பற்கள் சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்களை தேய்ப்போம். ஆனால் அவ்வாறு செய்தால் மட்டும் பற்கள் சுத்தமாகிவிடுமா என்ன? பற்களை சுத்தப்படுத்தும் பேஸ்ட்களை மட்டும் பயன்படுத்தினால், பற்கள் சுத்தமாகிவிடும் என்று நினைக்க வேண்டாம். எப்போதும் செயற்கை பொருட்களை விட இயற்கை பொருட்களுக்கு நிறைய மகத்துவம் உள்ளது. அதேப்போல் தான் பற்களை துலக்கவும் ஒரு சில சூப்பரான இயற்கை பேஸ்ட்கள் இருக்கின்றன. அந்த பொருட்கள் அனைத்தும் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள் […]

பெருங்குடலை பத்திரமா பாத்துக்கங்க!

நாம் உண்ணும் உணவுகள் சத்துக்களாக கிரகிக்கப்பட்ட பின்னர் தேவையில்லாத கழிவுகள் தினசரி வெளியேற்றப்படுகின்றன. இந்த கழிவுகளை நித்தம் அகற்றப் படவேண்டும் இல்லையெனில் அவை விஷமாகி நம் உடம்பையே பதம் பார்த்து விடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதனால்தான் நித்தம் கழித்தல் அவசியம் என்கின்றனர் அவர்கள். சுத்தம் சுகம் தரும். இது சுற்றுப்புறத்திற்கு மட்டும் அல்ல, எமது உடலுக்கும் உள்ளும் புறமும் மிக மிக அவசியம். உடலை வெளிப்புறம் எவ்வாறு சுத்தமாக வைத்திருக்கிறோமோ, அவ்வாறே உட்புறத்திலும் கழிவுகள் சிரமமாக அகற்றப்படுமாயின் […]

வாயு தொந்தரவா? மனசை ரிலாக்ஸ்சா வச்சிக்கங்க!

விருந்து, விசேசத்திற்கு சென்றால் ஒரு சிலர் பார்த்து பார்த்து சாப்பிடுவார்கள். ஏனென்றால் பாழாய் போன கேஸ் அப்பப்ப வேலையை காட்டிடும் என்று அச்சம்தான். “ஒரே கேஸ் பிராப்ளம். வயிறு கல் மாதிரி இருக்கு. பசியே எடுக்கலை. சரியா சாப்பிட முடியலை” என்ற புலம்பல்கள் அடிக்கடி நம் காதில் விழும் வார்த்தைகளாகும். வயிறு பெரிதாக இருப்பது என்பது இப்போதெல்லாம் மிகச் சாதாரணமான விஷயமாகி விட்டது. வயிறு பெரிதாக, உருண்டையாக இல்லாதவர்களைத் தேடுவதுதான் இந்தக் காலத்தில் மிகவும் கஷ்டம். இதில் […]

வயிற்றில் புண் இருக்கா? சீமைதுத்தி கீரை சாப்பிடுங்க !

உண்ணும் உணவு வயிற்றுக்குள் ஜீரணமாகவேண்டும். அப்பொழுதுதான் உணவில் உள்ள சத்துக்குள் கிரகிக்கப்பட்டு கழிவுகள் எளிதில் வெளியேறும். அதனால் வயிற்றினை நமது நண்பனாக நினைத்து எளிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். ஆனால் இன்றைக்கு பலரும் அதிக காரமுள்ள உணவுகள், பல்வேறுவகையான வேதிப்பொருட்கள், மாத்திரைகள் ஆகியவற்றை உட்கொள்வதால் வயிறு புண்ணாகிவிடுகின்றன. இன்றைக்கு நாம் உட்கொள்ளும் உணவுகள் பெரும்பாலும் வெப்பத்தில் சமைக்கப் பட்டவையாக இருக்கின்றன. உதாரணமாக வெப்பத்தில் கரையக்கூடிய அல்லது ஆவியாகக்கூடிய சத்துகள் சமைக்கும் பொழுது ஆவியாகிவிடுவதால் […]

இனிப்பைத் தவிர்த்தால் வாயு பிரச்சனை குறையும்!

வாய்வுத் தொல்லை மனிதர்களை பாடாய் படுத்திவிடும். அதற்கேற்றார்போல அதை சாப்பிடாதீங்க, இதை சாப்பிடாதீங்க என தேவையில்லாத அட்வைஸ் செய்வார்கள். “அந்த உணவுப் பொருட்கள் சாப்பிட்டா உடம்புக்கு நல்லது, ஆனா கேஸ் ப்ராப்ளம் உண்டாகும், பார்த்து சாப்பிடுங்க” என்று இன்னொரு பக்கம் ஆலோசனை வேறு சொல்வார்கள். இதனால், எதை சாப்பிடுவது? எதை சாப்பிடக் கூடாது? என்ற குழப்பம் நிறைய பேருக்கு வரத்தானே செய்யும்?. இதற்கான ஆலோசனைகளை கூறுகின்றனர் உணவியல் நிபுணர்கள் படியுங்களேன். முதலில் நமக்கு கேஸ் ப்ராப்ளம் வருவதற்குக் […]

கக்கூஸை விட கம்ப்யூட்டர் மவுஸிஸ்தான் எக்கச்சக்க பாக்டீரியா இருக்காம்!

வீடோ, அலுவலகமோ இன்றைக்கு கணினியை பயன்படுத்துபவர் அதிகரித்து விட்டனர். கணினியின் மிக முக்கிய பகுதியான மவுஸ் கிருமிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கழிவறையில் உள்ளதை விட அலுவலக கணினி மவுஸ்களில் மூன்று மடங்கு கிருமிகள் உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள். இது தொடர்பான ஆய்வு மேற்கொண்டவர்கள் மூன்று வெவ்வேறு அலுவலக இடங்களிலுள்ள 40 மேசைகளிலிருந்து எடுக்கப்பட்ட 158 பொருட்களையும் 28 டாய்லெட் சீட்கள் உட்பட கழிப்பறை பொருட்களை ஆய்வுக்குப் பயன்படுத்தினர். அப்போது கழிப்பறையில் தண்ணீர் […]

உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு!

நாம் உண்ணும் உணவு நன்றாக ஜீரணமாகி, சத்துக்களாக மாற்றப்பட்டு உடலில் சேர வேண்டும். அதேபோல் கழிவுகள் வெளியேற்றப்பட வேண்டும். இதற்கு ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுவது அவசியம். உணவு ஜீரணமாகாவிட்டால் வயிறு உப்புசம், சங்கடமான உணர்வு, சில சமயங்களில் வலி, பசியின்மை போன்றவை ஏற்படுகிறது. நாம் உட்கொள்ளும் உணவை உடலுக்கேற்றதாக மாற்றி அமைப்பதை ஜீரண சக்தி என்கிறோம். இதற்கு வயிற்றில் உள்ள ‘சூடு’தான் உணவு ஜீரணமாக உதவும். நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் கடுகு, மிளகு, கொத்தமல்லி, மிளகாய் […]