சுயஇன்பப் பழக்கம் உள்ளவர்களால் செக்ஸ் வாழ்க்கையில் மனைவியை திருப்திபடுத்த முடியுமா?

பிறப்புறுப்பில் அடிக்கடி ஏற்படும் அரிப்பிற்கு என்ன காரணம்?

பூஞ்சைத் தொற்றே இப்பிரச்சினைக்கான முதல் முக்கிய காரணம். இது தானாக வந்து தானாகவே சரியாகி விடும். உள்ளாடையினால் ஏற்படும் அலர்ஜி, பிறப்புறுப்பில் ஏடா கூடமாக வளரும் ரோமங்கள், ஈஸ்ட் தொற்று போன்றவையும் இதற் கான பிற காரணங்கள். தொடர்ந்து ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு அதன் பின் விளைவாக பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் இப்படி அரிப்பு ஏற்படலாம்.

சுய இன்பப் பழக்கம் உள்ளவர்களால் செக்ஸ் வாழ்க்கையில் மனைவியை திருப்திபடுத்த முடியுமா?

100 ஆண்களை எடுத்துக் கொண்டால் அவர்களில் 99 பேர் திருமணத்துக்கு முன்பு சுய இன்பப் பழக்கத்தினை மேற் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்.மீதம் இருக்கிற ஒருவர் ‘தான் சுய இன்பப் பழக்கத்தினை மேற்கொண்டதில்லை’ என்று பொய் சொல்பவராக இருப்பார். சில ஆண்களுக்கு திருமணத்துக்கு முன்பு சுய இன்பப் பழக்கம் இருந்திருக்கும். இத்தகைய பழக்கத்தினை கொண்டிருந்த பல ஆண்கள் திருமணத்துக்கு பின்பு ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பார்கள். அதாவது தங்களிடம் பல நாட்கள் தொற்றிக் கொண்டு இருந்த சுய இன்பப் பழக்கம் ஆனது, திருமணத்துக்கு பின்பு தங்கள் செக்ஸ் வாழ்க்கையை பாதித்து இனிமையான சங்கீதமாக இருக்க வேண்டிய தாம்பத்திய உறவை குழி தோண்டிப் புதைத்து விடுமோ என்று அஞ்சுவார்கள்.இவர்களுக்கு ஒரு நம்பிக்கையான டானிக் அறிவுரை என்னவெனில் சுய இன்பப் பழக்கம் என்பது தவறான நடவடிக்கை அல்ல. அது மனித வாழ்க்கையில் இயல்பானது. கடந்த நூற்றாண்டுகளில் சுய இன்பப் பழக்கம் என்பது ஒரு பாவ காரியமாக கருதப்பட்டது. மனிதனை படைத்து, காத்து வருகிற கடவுளுக்கு செய்கிற துரோகமாகக் கருதப்பட்டது. அதற்கு பிந்தைய காலக் கட்டத்தில் அந்நாளைய மருத்துவர்களே சுய இன்பப் பழக்கம் என்பது ஒரு மன நோய் என்று தப்புப் பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால், இன்றைய நாட்களில் சுய இன்பப் பழக்கம் என்பது ஒரு இயல்பான செக்ஸ் நடவடிக்கை என்று ஆகிவிட்டது. இதனை மருத்துவ உலகமும் சரியானது என்று அங்கீகரித்துவிட்டது. சுய இன்பப் பழக்கமானது உடலை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதனை மருத்துவ உலகம் அறிவியல் பூர்வமாக நிரூபித்து விட்டது, எனவே எந்த ஒரு கணவனும் தனது முந்தைய சுய இன்பப் பழக்கத்தை எண்ணி கலக்கமடைய வேண்டாம். சுய இன்பப் பழக்கம் என்பது ஒருவரது உடம்பிலேயே ஆரம்பித்து அவரது மூளையை சென்றடைந்து இன்பக் கிளர்ச்சி அடைய வைத்து அவருக்குள்ளேயே முடிந்து விடும். தாம்பத்திய சுகம் என்பது ஒருவர் இன்னொருவருக்குக் கொடுப்பதுடன் ஒருவர் இன்னொருவரிடமிருந்து பெறுவது. எனவே… சுய இன்பப் பழக்கத்துக்கும் தாம்பத்திய சுகத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆகவே எந்த ஒர் ஆணும் தான் எப்போதோ சுய இன்பம் அனுபவித்ததை நினைத்து நினைத்து மனத் தளர்ச்சி அடையத் தேவையில்லை. யாராவது சுய இன்பப் பழக்கம் உள்ளவர்களால் செக்ஸ் வாழ்க்கையில் மனைவியை திருப்திபடுத்த முடியாது என்று சொன்னால்… நல்லா பீதியைக் கிளப்புறாங்கப்பா என்று ஒரு சிரிப்பை சிந்திய படி அந்த இடத்தை விட்டு நடையைக் கட்டிவிடுங்கள்

ஹாய் டாக்டர் நான் கடந்த 8 வருடமாக சுய இன்பம் அனுபவிக்கிறேன். ஆரம்பித்த புதிதில் ஒரு நாளைக்கு 4 முறை அனுபவித்துள்ளேன். இப்போது எனக்கு விந்து சிக்கிரம் வெளிபடுவது போன்று நான் உணர்கிறேன் இது ஆன்மை குறைந்ததற்கு அறிகுறிய இதனால் குழந்தைள் பிறப்பதில் பதிப்பு ஏற்படுமா. டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டுமா ? ப்ளீஸ் பதில் பண்ணுங்க.

Post Author:

  • Selvakumar

    கடந்த 6 வருசம் எனக்கு சுய இன்பம் அனுபவிக்கிறேன் எனக்கு குலந்தை பாக்கியம் இருக்குமா ?சொல்லுங்க ப்ஸிஸ் பதில் அணுப்புங்க ப்ஸிஸ்